2021-ல் அதிகம் டுவீட் செய்யப்பட்ட திரைப்படம் : முதல் இடத்தில் நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்'


2021-ல் அதிகம் டுவீட் செய்யப்பட்ட திரைப்படம் : முதல் இடத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர்
x
தினத்தந்தி 9 Dec 2021 3:08 PM IST (Updated: 9 Dec 2021 3:08 PM IST)
t-max-icont-min-icon

இரண்டாவது இடத்தை நடிகர் அஜித்தின் 'வலிமை' படம் பெற்றுள்ளது.

சென்னை, 

ஆண்டுதோறும் சமூக வலைதளமான டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படம் குறித்து சர்வே எடுப்பது வழக்கம் . அந்தவகையில் இந்த வருடம் டுவிட்டரில் அதிகம் பதிவுகள் இடம்பெற்றுள்ள  திரைப்படங்களின் பட்டியலை டுவிட்டர் வெளியிட்டுள்ளது. 

2021ம் ஆண்டில்  டுவிட்டரில் அதிகம் டுவீட் செய்யப்பட்ட  திரைப்படங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நடிகர் அஜித்தின்  'வலிமை' படம் பெற்றுள்ளது. அடுத்ததாக மூன்றாவது இடத்தையம் நடிகர் விஜய்யின்  'பீஸ்ட்' திரைப்படம்  பெற்றுள்ளது.நடிகர் சூர்யாவின் ஜெய் பீம்  4 வது இடத்தையும், நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படம் 5-வது  இடத்தை பெற்றுள்ளது.


Next Story