நடிகர் ரகுமானின் மகள் திருமண நிகழ்ச்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
நடிகர் ரகுமானின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மணமக்களுக்கு பசுமைக் கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார்.
சென்னை,
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரகுமான். தற்போது ஜெயம் ரவி நடிக்கும் ஜன கண மன, விஷாலுடன் துப்பறிவாளன் 2, மணிரத்னத்தின் ‘பொன்னியன் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவர் கடத்த 1993 ஆம் ஆண்டு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானுவின் சகோதரி மெஹ்ருன்னிஸா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ருஷ்டா ரஹ்மான்-அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மணமக்களுக்கு பசுமைக் கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story