கூட்டத்தில் சிக்கிய பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்


கூட்டத்தில் சிக்கிய பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்
x
தினத்தந்தி 12 Dec 2021 3:24 PM IST (Updated: 12 Dec 2021 3:24 PM IST)
t-max-icont-min-icon

கூட்டத்தில் சிக்கிய பிரபல இந்தி நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள் மவுனிராயை தொடவும், கட்டிப்பிடிக்கவும் முயற்சித்தனர்.

பிரபல இந்தி நடிகை மவுனிராய். இவரை வலைத்தளத்தில் 20 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். மும்பையில் ரசிகர்கள் கூட்டத்தில் மவுனிராய் சிக்கி தவித்த தகவல் வெளியாகி உள்ளது. மும்பை ஜூகு பகுதியில் உள்ள ஒரு ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு சென்றுவிட்டு மவுனிராய் வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை பார்த்துவிட்டனர். 

உடனடியாக மவுனிராயை சூழ்ந்து செல்பி எடுத்தனர். ஆட்டோ கிராப் கேட்டனர். அப்போது சிலர் அத்துமீறி மவுனிராய் கையை பிடித்து இழுத்தனர். தகாத முறையில் உடலை தொடவும், கட்டிப்பிடிக்கவும் முயற்சித்தனர். இதனால் அதிர்ச்சியான மவுனிராய் சத்தம் போட்டார். ஒரு வழியாக கூட்டத்தினரை தள்ளிவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story