நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் - தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்
புதுச்சேரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி,
நடிகர் ரஜினிகாந்தின் 71 வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் அன்னதானம் நடக்கிறது.
நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் மம்முட்டி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் திரையுலகினர் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூகவலைத்தளங்கள் மூலமாக ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில், நடிகர் ரஜினியின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, தங்கத்தேர் இழுக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் பிரசாதம் வழங்கினர்.
ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் - தங்கத் தேர் இழுத்த ரசிகர்கள்!#Rajinikanth | #HBDRajini | #RajinikanthFanshttps://t.co/OQOmlFfjyU
— Thanthi TV (@ThanthiTV) December 12, 2021
Related Tags :
Next Story