அஜித்குமார் துணிச்சல் மிகுந்த கதாநாயகன் - பிரபல கதாநாயகி
அஜித்குமார் துணிச்சல் மிகுந்தவர். சண்டை காட்சிகளில் அவர் ‘டூப்’ நடிகர்களை அனுமதிப்பதில்லை என்று பிரபல கதாநாயகி மனம் திறந்து சொல்கிறார்.
சோழா பொன்னுரங்கம் தயாரித்த ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழ் திரைஉலகுக்கு கதாநாயகனாக அறிமுகமான அஜித்குமார், இதுவரை 59 படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய 60-வது படம், ‘வலிமை.’ இந்தப் படத்திலும் அவர் நடித்து முடித்து விட்டார். இதில் அவருக்கு ஜோடி, ஹுமாகுரேசி.
கதாநாயகிகள் விஷயத்தில், அஜித் தலையிடுவதில்லை. தயாரிப்பாளரும், டைரக்டரும் யாரை ஒப்பந்தம் செய்கிறார்களோ, அவருடன் ஜோடியாக நடிக்கிறார். அஜித்குமார் பற்றி ஜோடியாக நடித்த ஒரு பிரபல கதாநாயகி மனம் திறந்து சொல்கிறார்:
‘‘அஜித்குமார் துணிச்சல் மிகுந்தவர். இதற்கு அவர் கலந்து கொண்ட கார் பந்தயங்களே உதாரணம். சண்டை காட்சிகளில் அவர் ‘டூப்’ நடிகர்களை அனுமதிப்பதில்லை. அனுமதிக்க சொல்லி வற்புறுத்தும் ஸ்டண்ட் மாஸ்டர்களிடம், ‘‘டூப் நடிகரும் என்னை மாதிரி ஒரு மனிதர்தானே... எனக்கு குடும்பம் இருப்பது போல் அவருக்கும் குடும்பம் இருக்கும் அல்லவா?’’ என்று கேட்கிறார்.
அஜித், ரசிகர்களை மதிப்பவர். அவர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இதுபற்றி அவர் யாரிடமும் பேசுவதில்லை. இதற்காகவே அவர் தமிழ்நாடு முழுவதும் இருந்த தனது ரசிகர் மன்றங்களை ஒரே நாளில் கலைத்து விட்டார். இது, எந்த கதாநாயகனும் செய்திராத துணிச்சலான நடவடிக்கை’’ என்கிறார், அந்த பெயர் சொல்ல விரும்பாத கதாநாயகி.
Related Tags :
Next Story