'பீஸ்ட்' படத்தின் ரிலீஸ் அப்டேட்..! ரசிகர்கள் உற்சாகம்..!


பீஸ்ட் படத்தின் ரிலீஸ் அப்டேட்..! ரசிகர்கள் உற்சாகம்..!
x
தினத்தந்தி 31 Dec 2021 7:08 PM IST (Updated: 31 Dec 2021 7:08 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி உள்ள 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சமீபத்தில் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கின. இந்த நிலையில், புத்தாண்டு அப்டேட்டாக இன்று படத்தின் புதிய போஸ்டர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.



இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், 'இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா' என்ற வாழ்த்துகளுடன் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். 

மேலும் 'பீஸ்ட்' திரைப்படம் வருகிற 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story