‘இந்தியன்-2’ படத்தில் நெடுமுடி வேணுவுக்கு பதில் நவரச நாயகன் கார்த்திக்?


‘இந்தியன்-2’ படத்தில் நெடுமுடி வேணுவுக்கு பதில் நவரச நாயகன் கார்த்திக்?
x
தினத்தந்தி 14 Jan 2022 3:36 PM IST (Updated: 14 Jan 2022 3:36 PM IST)
t-max-icont-min-icon

உலக நாயகன் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் நெடுமுடி வேணு இறந்து விட்டதால், அவருக்கு பதில் நவரச நாயகன் கார்த்தியை நடிக்க வைக்க பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருந்தார். அவருக்கு திருமணமாகி, இப்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அந்தப் படத்தில் அவர் நடிக்க மறுத்து விலகிவிட்டார்.

இதில் நடித்து வந்த விவேக், நெடுமுடி வேணு ஆகிய இருவரும் இறந்து விட்டார்கள். தற்போது நெடுமுடி வேணு நடித்து வந்த கதாபாத்திரத்தில் கார்த்திக்கை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுடன் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.
1 More update

Next Story