‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் துப்பறியும் நிபுணராக சந்தானம்


‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் துப்பறியும் நிபுணராக சந்தானம்
x
தினத்தந்தி 28 Jan 2022 2:57 PM IST (Updated: 28 Jan 2022 2:57 PM IST)
t-max-icont-min-icon

ஏஜென்ட் கண்ணாயிரம் 2019 தெலுங்கில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக்.

‘சபாபதி’ படத்தை அடுத்து சந்தானம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தில் அவர் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர், ரியா சுமன்.

சந்தானம்-ரியா சுமன் ஜோடியுடன் ஸ்ருதி ஹரிகரன், முனிஷ்காந்த், இ.ராமதாஸ், இந்துமதி, ஆதிரா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். மனோஜ் பீதா டைரக்டு செய்கிறார். அவர் சொல்கிறார்:-

‘‘இது, வழக்கமான சந்தானம் படம் அல்ல. மர்மங்களுடன் கூடிய சஸ்பென்ஸ் கதை. எல்லா தரப்பினரையும் திருப்தி செய்யும். பொதுவாக மர்மங்கள் நிறைந்த துப்பறியும் படங்கள் நகர பின்னணியில்தான் நடைபெறும். இந்தப் படத்தின் கதை கிராமப் பின்னணியில் நடக்கிறது. பெரும் பகுதி காட்சிகள் கோவை, பொள்ளாச்சி மற்றும் கேரளாவில், 55 நாட்கள் நடைபெற்றது.’’

1 More update

Next Story