அஜித் படத்தில் மோகன்லால்


அஜித் படத்தில் மோகன்லால்
x
தினத்தந்தி 1 Feb 2022 9:51 AM (Updated: 1 Feb 2022 9:51 AM)
t-max-icont-min-icon

அஜித்தின் 61-வது படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த படத்தில் நடிக்க அஜித் தயாராகி உள்ளார். இது அவருக்கு 61-வது படம். இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை இயக்கிய வினோத் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பை மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஐதராபாத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக அங்கு பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். மொத்த படப்பிடிப்பையும் 6 மாதங்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறாப்படுகிறது.

61-வது படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடிக்க தபுவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. கதைக்கு வயதான கதாநாயகி தேவை என்பதால் அவரை பரிசீலிக்கின்றனர். இந்த நிலையில் அஜித்தின் 61-வது படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மோகன்லால் தமிழில் கமல்ஹாசனுடன் உன்னைப்போல் ஒருவன், விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் படங்களில் நடித்து இருக்கிறார்.

1 More update

Next Story