‘டப்பிங்’ யூனியன் தேர்தலில் வெற்றி: ராதாரவி தலைமையில் பதவி ஏற்பு

தென்னிந்திய சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் தேர்தலில் நடிகர் ராதாரவி தலைமையிலான 23 பேர் கொண்ட குழு வெற்றி பெற்றுள்ளது.
தென்னிந்திய சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் தேர்தல் நடந்தது. அதில் நடிகர் ராதாரவி தலைமையிலான 23 பேர் கொண்ட குழு வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர்கள், ‘பெப்சி’ தலைவர் செல்வமணி முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.
தலைவராக ராதாரவி, பொதுச்செயலாளராக கதிரவன், பொருளாளராக சீனிவாசமூர்த்தி ஆகியோருக்கு டைரக்டர் செல்வமணி பதவியேற்பு செய்து வைத்தார். துணைத்தலைவர் பதவிகளுக்கு கே.மாலா, எம்.ராஜேந்திரன், எம்.நாராயணமூர்த்தி, இணை செயலாளர் பதவிகளுக்கு டி.கோபி, துர்கா சுந்தரராஜன், குமரன் ஆகியோரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story






