டாப்சி பகிர்ந்த காதல் அனுபவம்


டாப்சி பகிர்ந்த காதல் அனுபவம்
x
தினத்தந்தி 22 March 2022 3:42 PM IST (Updated: 22 March 2022 3:42 PM IST)
t-max-icont-min-icon

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்த டாப்சி தற்போது இந்தி பட உலகிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், தனது இளம் வயது காதல் அனுபவங்களை டாப்சி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், ‘’சிறுவயதிலேயே எனக்கு படிப்பில் அதிக ஆர்வம். நான் முதல் பெஞ்ச் மாணவி. அப்போது கண்ணாடி, ரெட்டை ஜடை, பற்களுக்கு கிளிப் என்று பார்க்கவே நான் ஒரு மாதிரியாக இருப்பேன். கல்லூரி நாட்களில் பலர் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது. யாராவது கண்ணுக்கு அழகாக தெரிந்தால் அவனை காதலிப்பதுபோல் நினைத்து கொள்வேன். அந்த ஈர்ப்பு ஒருமாதம்தான் இருக்கும். அடுத்த மாதம் இன்னொருவன் மீது ஈர்ப்பு ஏற்படும். இப்படி எனது ஆண் நண்பர்கள் பெயர் மாதம் ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும். 

ஆனால், யாரையும் நெருங்கி சென்று உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னது இல்லை. ஒரு நாள் ஒரு பையனோடு ‘டேட்டிங்’ சென்றபோது அவன் திருமணம், குழந்தைகள், வாழ்க்கை என்றெல்லாம் பட்டியல் சொல்ல ஆரம்பித்தான். எனக்கு பயமாகிவிட்டது. அன்று முதல் அவனுடன் செல்வதையும் தவிர்த்துவிட்டேன்’’ என்றார்.

Next Story