நண்பர்களுக்கு ஓசையில்லாமல் உதவும் விஜய்
தொழிலில் முடங்கியிருக்கும் அவரது நண்பர்களுக்கு வேண்டிய பொருளாதார உதவிகளை ஓசையில்லாமல் விஜய் செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், விஜய். இவருக்கு தமிழகம் தாண்டி கேரளா, ஆந்திரா போன்ற பக்கத்து மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளம் ஏராளம். தற்போது இவரது நடிப்பில் ‘பீஸ்ட்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
என்னதான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், கிடைக்கும் நேரங்களில் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் செய்கிறார், விஜய். அந்தவகையில் லயோலா கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பர்களை வாரந்தோறும் தனது இல்லத்தில் சந்திப்பதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார்.
இந்த சந்திப்பின்போது தனது கல்லூரி கால அனுபவத்தை வேடிக்கையாக பகிர்ந்து கொள்ளும் விஜய், தனது நண்பர்களின் தொழில் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆர்வமாக கேட்பாராம்.
அந்தவகையில் தொழிலில் முடங்கியிருக்கும் அவரது நண்பர்களுக்கு வேண்டிய பொருளாதார உதவிகளை ஓசையில்லாமல் விஜய் செய்து வருகிறார். இதனால் அவரது நண்பர்கள் பூரித்து போயிருக்கிறார்கள்.
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் நட்பை மறக்காமல் அவர் செய்யும் உதவி வியக்க வைப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
Related Tags :
Next Story