ஓ.டி.டி.யிலும் அஜித் படம் சாதனை
முந்தைய அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்து ‘வலிமை’ படம் புதிய சாதனை செய்து இருப்பதாக சம்பந்தப்பட்ட ஓ.டி.டி. இணையதளம் சார்பில் டுவிட்டரில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அஜித்குமார் நடித்த ‘வலிமை’ படம் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் நல்ல வசூலையும் குவித்தது. ஒரு மாதம் கடந்த நிலையில் ‘வலிமை’ படம் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகியிருக்கிறது. ஓ.டி.டி.யில் வெளியான முதல் நாளிலேயே ‘வலிமை’ படம், 100 மில்லியன் நேரலை நிமிடங்களை, அதாவது 10 கோடி நேரலை நிமிடங்களை கடந்திருக்கிறது. அதேபோல ஒரு வாரத்தில் 500 மில்லியன் நேரலை நிமிடங்களை (50 கோடி) கடந்துள்ளது. இதன் மூலம் முந்தைய அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்து ‘வலிமை’ படம் புதிய சாதனை செய்து இருப்பதாக சம்பந்தப்பட்ட ஓ.டி.டி. இணையதளம் சார்பில் டுவிட்டரில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அஜித்குமார் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.
Related Tags :
Next Story