'அனந்தம்' தொடரின் டீசரை வெளியிட்டார் யுவன் சங்கர் ராஜா..!


அனந்தம் தொடரின் டீசரை வெளியிட்டார் யுவன் சங்கர் ராஜா..!
x
தினத்தந்தி 3 April 2022 10:18 PM IST (Updated: 3 April 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

பிரகாஷ் ராஜ் நடித்துள்ள 'அனந்தம்' தொடரின் டீசர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  பிரியா.வி என்பவர் 'அனந்தம்' என்ற தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த தொடர் 1964-2015 வரை அனந்தம் என்ற வீட்டில் வாழ்ந்த 3 தலைமுறைகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் நடிகர் பிரகாஷ் ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ், மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் வி.முரளி ராமன் இந்த தொடரை தயாரித்துள்ளார். இதன் திரைக்கதையை பிரியா.வி, ராகவ் மிர்தாத், பிரீத்தா ஜெயராமன் மற்றும் ரீமா ரவிச்சந்தர் எழுதியுள்ளனர். பகத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.எஸ்.ராம்  இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார். 

இந்த தொடர் வருகிற 22-ம் தேதி  ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது இந்த தொடரின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

Next Story