7 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 7 வருடங்களுக்கு பிறகு ‘ஓ சாதி சால்’ என்ற இந்தி படத்தை இயக்குகிறார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த தனுஷ் - ஐஸ்வர்யா , கடந்த பிப்ரவரி மாதம் பிரிந்தனர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதனைத்தொடர்ந்து இருவரும் அவரவர் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யா சினிமா பணிகளில் படுபிஸியாக மாறி விட்டார்.
அவர் ஏற்கனவே ‘3’, ‘வை ராஜாவை ’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். 7 வருடங்களுக்கு பிறகு ‘ஓ சாதி சால்’ என்ற இந்தி படத்தை இயக்குகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகிறது. இதற்கான திரைக்கதை வேலைகளில் ஐஸ்வர்யா மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதே வே ளையில் தீவிர உடற்பயிற்சிகளிலும் அதிக கவனம் செ லுத்த ஆரம்பித்திருக்கிறார். விதவிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வருகிறார்.
Related Tags :
Next Story