நடிகர் சூரி அளித்த புகார்: விஷ்ணு விஷாலின் தந்தை மீது வழக்குப்பதிவு
நடிகர் சூரியிடம் பணமோசடி செய்ததாக முன்னாள் டிஜிபி மற்றும் தயாரிப்பாளர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
நடிகர் சூரியிடம் பணமோசடி செய்ததாக முன்னாள் டிஜிபி மற்றும் தயாரிப்பாளர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் பணமோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு போலீஸ் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
ஆனால் புகார்மீது நடவடிக்கை இல்லையென்று கூறி சென்னை ஐகோரட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கை மாற்றியதுடன் 6 மாத காலத்திற்குள்ளா வழக்கை முடிக்கவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அடையாறு காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறுவழக்காக பதிவு செய்துள்ளனர். மேலும் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியும் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
Related Tags :
Next Story