சுந்தர்.சி, ஜெய் நடிக்கும் 'பட்டாம்பூச்சி' படத்தின் டீசர் வெளியானது..!
சுந்தர்.சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள 'பட்டாம்பூச்சி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தற்போது 'பட்டாம்பூச்சி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெய் சைக்கோ வில்லனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கியுள்ளார். ஹனி ரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பட்டாம்பூச்சி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சைக்கோ திரில்லர் வகை கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ள பட்டாம்பூச்சி படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Teaser of an investigative thriller,my best wishes to the team. #Pattampoochihttps://t.co/Kt7ztTvZ64#PattampoochiFromMay13#SundarC#BadriNarayanan@khushsundar@Actor_Jai@HoneyRoseOffl#ImmanAnnachi@FennyOliver@navneethsundar@vonimusic@RIAZtheboss@CtcMediaboy
— Raja yuvan (@thisisysr) April 23, 2022
Related Tags :
Next Story