'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் இருந்து 2-வது பாடல் வெளியீடு


வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இருந்து 2-வது பாடல் வெளியீடு
x

வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை,

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

அந்த வகையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று அந்த படத்தில் இருந்து இரண்டாவதாக 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள இந்த பாடலை, பாடலாசியர் தாமரை எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story