47 வருட ரஜினிசம்...! எளிமையாக கொண்டாடிய ரஜினி குடும்பத்தார்
பெருமைமிக்க 47 வருட ரஜினிசம், கடின உழைப்பு அர்ப்பணிப்பு! கடின உழைப்பு அர்ப்பணிப்பு! அவருக்கு பிறந்ததில் பெருமை- ஐஸ்வர்யா ரஜினிகாந்
சென்னை
1975-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன்பின்னர் இவரின் நடிப்பின் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களின் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
இந்த நெகிழ்ச்சியான தருனத்தை அவரது மகள் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தின் மூலம் கொண்டாட்டமாக பகிர்ந்திருக்கிறார்.
மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்த 47 Years of Rajinism பேனரை வியப்பாக எளிமையான தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் பார்க்கும் புகைப்படங்களை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாடப்படும் அதேவேளையில் அவருடைய தந்தையின் திரைவாழ்க்கையை குறிக்கும் வகையில் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், சுதந்திரத்தின் 76 ஆண்டுகள் தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும் வலிமைக்கும் வணக்கம். பெருமைமிக்க 47 வருட ரஜினிசம், கடின உழைப்பு அர்ப்பணிப்பு! அவருக்கு பிறந்ததில் பெருமை,பெருமை மகள் என்று குறிப்பிட்டு, அதோடு ரஜினிக்கு தேசியக்கொடியை குத்தி விடும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த பதிவு அனைவரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
தனது அப்பா ரஜினிகாந்த் மற்றும் அம்மா லதா ரஜினிகாந்த் இணைந்திருக்கும் படத்தை வெளியிட்டிருக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த், "எங்கள் அன்பான ஜில்லுமா.. அப்பாவின் மிகப்பெரிய ரசிகை, எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்" என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன் முதலில் நடித்த அபூர்வ ராகங்கள் படம் 1975-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. அதன்படி ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து நேற்றோடு 47 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.