அஜித்தின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியீடு ... ரசிகர்கள் மகிழ்ச்சி


அஜித்தின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியீடு ... ரசிகர்கள் மகிழ்ச்சி
x

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து வருகின்றார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் இப்படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த புது அப்டேட் இன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு ஏகே-63 என்று தற்காலிகமாக படக்குழு பெயர் வைத்துள்ளனர். அஜித்தின் தீவிர ரசிகரான 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏகே-63 படம் இந்த ஆண்டு வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அஜித்தின் ஏகே-63 படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானதை தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story