மிகப்பெரிய தொடக்கத்தைப் பெற்ற 'ஆடு ஜீவிதம்' திரைப்படம்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?


மிகப்பெரிய தொடக்கத்தைப் பெற்ற ஆடு ஜீவிதம் திரைப்படம்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
x

கோப்புப்படம் 

பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். அமலாபால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நேற்று (மார்ச் 28) வெளியானது.

இந்த நிலையில் 'ஆடு ஜீவிதம்' திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபீசில் ரூ.7.50 கோடிக்கும் மேலாக வசூல் செய்து, மிகப்பெரிய தொடக்கத்தை பெற்ற மலையாளப் படத்தில் ஒன்றாக அமைந்துள்ளது. 'ஆடு ஜீவிதம்' படத்தின் மலையாளப் பதிப்பு ரூ.6.50 கோடிக்கு மேலாகவும், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி பதிப்பு ரூ.1 கோடிக்கு மேலாகவும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக அளவில் 'ஆடு ஜீவிதம்' திரைப்படம் ரூ.14 முதல் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முதல் நாள் வசூலைப் பொறுத்தவரை, 'ஆடு ஜீவிதம்' திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

அதன்படி, 'ஆடு ஜீவிதம்' படத்தின் முதல் நாள் வசூல் டோவினோ தாமஸின் '2018' (ரூ 1.7 கோடி) திரைப்படத்தை விட ஐந்து மடங்கு அதிகமாகும். மேலும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்' (ரூ.3.3 கோடி) திரைப்படத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதுவரை உலகளவில் ரூ.212 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ள 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் அதிக வசூல் செய்த மலையாளப் படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story