சூர்யாவுடன் இணையும் அமீர்... வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட் வெளியானது...!


சூர்யாவுடன் இணையும் அமீர்... வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட் வெளியானது...!
x

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை,

தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். தற்போது விடுதலை படத்தின் 2 பாகத்தை இயக்கி வருகிறார்.

விடுதலை-2 படத்திற்கு பிறகு இவர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தை இயக்க உள்ளார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராகிறது. மெரினா போராட்டம் மூலம் உலக அளவில் பிரபலமான ஜல்லிக்கட்டு படத்தில் சூர்யா நடிப்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் 'வாடிவாசல்' படத்தின் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, 'வாடிவாசல் படத்தின் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். வட சென்னை படத்தில் ராஜனாக அமீர் நடித்திருந்தார். அப்போது நான் அவருக்கு சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், வாடிவாசல் படத்தில் இவர் இருந்தால் பல விஷயங்களை என்னால் கற்றுக்கொள்ள முடியும்' என்று கூறினார்.


Next Story