'பட்டாசு வெடித்தபோது விபத்து' - நடிகை லதா


பட்டாசு வெடித்தபோது விபத்து - நடிகை லதா
x

நடிகை லதா தான் சிறுவயதில் நடந்த வெடி விபத்து பற்றிய நினைவுகளை நடந்துள்ளார்.

தீபாவளி என்றாலே புதுஉடைகளும், பட்டாசும்தான். புது உடைகள் எவ்வளவு என்றாலும் அணிய பிடிக்கும்.

ஆனால் சிறுவயதில் இருந்தே எனக்கு பட்டாசு வெடிக்க பயம். மற்றவர்கள் பட்டாசு கொளுத்தும்போது பக்கத்திலேயே போகமாட்டேன். அந்த பயத்துக்கு காரணம் இருக்கிறது. நான் பள்ளியில் படிக்கும்போது என் தம்பி வெங்கடேஷ் ராக்கெட் வெடித்தான். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவன் காயம் அடைந்தான். அவன் முகத்தில் தீப்புண்கள் மாதிரி காயம் ஏற்பட்டது. அதில் இருந்து பட்டாசு என்றாலே பயம் அதிகமாகிவிட்டது.

இப்போதும்கூட தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதை நினைத்துக்கூட பார்ப்பது இல்லை. முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கி வருகிறேன். எல்லா தீபாவளி பண்டிகையின்போதும் இதைத்தான் செய்கிறேன். இந்த வருடமும் அதைத்தான் செய்யப் போகிறேன்.

தீபாவளி பண்டிகையின்போது என் தம்பிக்கு ஏற்பட்ட காயம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.

இப்போதெல்லாம் இளம் தலைமுறையினரிடம் பட்டாசு வெடிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. தீபாவளி கொண்டாட்டத்துக்கான புத்தாடைகள், பட்டாசுகள் எல்லாமே ஆன்லைனில் கிடைத்துவிடுகின்றன. நேரில் போய் வாங்கவேண்டிய கட்டாயம் இல்லை.

எல்லோருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள்.


Next Story