பைக் ரைடர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் நடிகர் அஜித்குமார் - வைரலாகும் வீடியோ


பைக் ரைடர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் நடிகர் அஜித்குமார் - வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 20 March 2024 10:27 AM GMT (Updated: 20 March 2024 12:36 PM GMT)

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

அஜித் குமாருக்கு பைக் ரைடு செல்வது என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பைக்கில் ரைடு கிளம்பிவிடுவார். தன் பைக்கில் உலகம் முழுக்க சுற்றி வர வேண்டும் என்பதே அஜித் குமாரின் ஆசை. அதனால் நேரம் கிடைக்கும்போது எல்லாம் ரைடு சென்று விடுவார். இந்தநிலையில் அஜித்குமார் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் பைக் ரைடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பைக் ரைடு சென்ற இடத்தில் பைக் ரைடர்களுக்கு நடிகர் அஜித்குமார் டிப்ஸ் கொடுக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

அஜித் பைக் ரைடிங் செய்பவர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. வீடியோவில் நடிகர் அஜித்குமார் பைக் ரைடர் ஒருவருக்கு பாடம் எடுக்கும் காட்சிகளும், டிப்ஸ் கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறார் அஜித் குமார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் துவங்கும் என்றும், குட் பேட் அக்லி 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story