அதிர்ச்சி முடிவு எடுத்த நடிகர் அக்‌ஷய்குமார்


அதிர்ச்சி முடிவு எடுத்த நடிகர் அக்‌ஷய்குமார்
x

படங்கள் நஷ்டம் காரணமாக அக்‌ஷய்குமார் தனது சம்பளத்தை ரூ.100 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக குறைத்து அதிர்ச்சி முடிவு எடுத்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்த அக்‌ஷய்குமார் இந்தியில் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து உச்சத்தில் இருந்தார். ஆனால் இப்போது அவரது நிலைமை இறங்குமுகமாக உள்ளது. சமீபத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பில் வந்த இந்தி படங்கள் தலைகுப்புற விழுந்து படுதோல்வியை சந்தித்துள்ளன. இதனால் அவரை வைத்து படங்கள் எடுத்த தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்து வீதிக்கு வந்துள்ளனர். தோல்விக்கு அக்‌ஷய்குமார் வாங்கும் அதிக சம்பளமே காரணம் என்கின்றனர். ஒரு படத்துக்கு ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை வாங்குகிறார். ஆனால் 100 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுப்பது இல்லையாம். அந்த நாட்களுக்குள் முழு படத்தையும் முடித்து விட வேண்டும் என்கிறாராம்.

படங்கள் நஷ்டம் காரணமாக அக்‌ஷய்குமார் தனது சம்பளத்தை ரூ.100 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக குறைத்து அதிர்ச்சி முடிவு எடுத்துள்ளார். ரூ.20 கோடி சம்பளம் தந்தால் போதும் என்றும், படம் வெற்றி பெற்றால் லாபத்தில் ஒரு தொகையை கொடுங்கள் என்றும் கூறுகிறாராம். அக்‌ஷய்குமாரின் மன மாற்றத்தால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

1 More update

Next Story