பாலிவுட் நடிகர் சதீஷ் கவுசிக் மரணம்


பாலிவுட் நடிகர் சதீஷ் கவுசிக் மரணம்
x

பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கவுசிக் தன்னுடைய 67 வயதில் காலமானார்.

மும்பை,

பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் சந்திர கவுசிக் இன்று காலமானார். அவருக்கு வயது 67.

ஏப்ரல் 13, 1956-ல் அரியானாவில் பிறந்த சதீஷ் சந்திர கவுசிக், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் 1987-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான மிஸ்டர் இந்தியா மூலம் நடிகராக அறிமுகமானார்.

அவரது மறைவுக்கு நடிகர் அனுபம் கேர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மரணமே இந்த உலகத்தின் இறுதி உண்மை என்று எனக்குத் தெரியும்! நீ இல்லாமல் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது சதீஷ்! ஓம் சாந்தி!" என்று தெரிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story