குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மோகன்லால்


குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மோகன்லால்
x

Image Courtesy : @Mohanlal twitter

நடிகர் மோகன்லால் இன்று தனது பிறந்தநாளை குழந்தைகளுடன் எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார்.

திருவனந்தபுரம்,

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், தமிழில் கோபுர வாசலிலே, இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மோகன்லால் தனது பிறந்தநாளை 'ஏஞ்சல்ஸ் ஹட்' என்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


1 More update

Next Story