நடிகர் நாகசவுரியா திருமணம்


நடிகர் நாகசவுரியா திருமணம்
x

நடிகர் நாகசவுரியாவுக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளது.

விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான தியா படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடித்தவர் நாகசவுரியா, தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி இளம் நடிகராக உயர்ந்துள்ளார். இதுவரை நாகசவுரியா நடிப்பில் 25 படங்கள் வந்துள்ளன. நாகசவுரியாவுக்கும், சாய்பல்லவிக்கும் ஏற்கனவே மோதல் ஏற்பட்டு பரபரப்பானது. சாய்பல்லவி படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் தாமதமாகவே வருவார் என்றும், அவருக்கு நடிப்பில் ஈடுபாடு இல்லாமல் எல்லோரையும் கஷ்டப்படுத்தினார் என்றும் நாகசவுரியா குற்றம் சாட்டினார். இதனை மறுத்த சாய்பல்லவி, ''படப்பிடிப்பில் நான் மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுத்ததாக நாகசவுரியா சொன்னது வியப்பாக உள்ளது. இதுபோல் யாரும் என்மீது குற்றம் சொன்னது இல்லை" என்று பதிலடி கொடுத்து இருந்தார். இந்த மோதல் பரபரப்பானது. இந்த நிலையில் நாகசவுரியாவுக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த அனிஷா ஷெட்டி என்பவரை மணக்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 19-ந் தேதி பெங்களூருவில் நடக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர்.


Next Story