நடிகர் சுனில் ஷெட்டி மருமகனான கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு விடுத்த எச்சரிக்கை...


நடிகர் சுனில் ஷெட்டி மருமகனான கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு விடுத்த எச்சரிக்கை...
x

நடிகர் சுனில் ஷெட்டி தனது மருமகனான கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.

புனே,

இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர் சுனில் ஷெட்டி. இவர் தமிழில், நடிகர் ஷாம் நடித்த 12பி படத்தில் நடித்து உள்ளார். இவரது மகள் நடிகை அதியா ஷெட்டி.

அதியாவுக்கும், கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்கும் இடையே கடந்த ஜனவரி 23-ந்தேதி சுனில் ஷெட்டியின் பண்ணை இல்லத்தில் வைத்து திருமணம் நடந்தது. அதில், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், சுனில் ஷெட்டியிடம் பேட்டி ஒன்றில் அவரது மருமகனான கே.எல். ராகுலுக்கு எச்சரிக்கை விடுத்து பேசும்படி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறும்போது, நீங்கள் ஓர் அழகான மனிதராக இருக்காதீர்கள். உங்களுடன் எங்களை ஒப்பிடும்போது நாங்கள் தாழ்ந்தவர் போன்று காணப்படுகிறோம்.

நல்லது என்றால் என்ன? என்று ஒவ்வொருவரும் நம்புவது போன்று ஒரு நல்ல பையனாக நீங்கள் இருக்க முடியாது. அவர் அதுபோன்ற குழந்தையே. அதியாவிடம் நான் எப்போதும், நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று கூறுவேன் என சுனில் ஷெட்டி தனது மருமகனை பெருமைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

1 More update

Next Story