'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து


பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து
x

'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்தார்.

இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இந்த படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'பிச்சைக்காரன் -2' திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு கோடையில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 'பிச்சைக்காரன் -2' படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. மலேசியா, லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story