வாரிசு இசை வெளியீட்டு விழா- ரசிகர்களுடன் செல்பி எடுத்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் விஜய்


வாரிசு இசை வெளியீட்டு விழா- ரசிகர்களுடன் செல்பி எடுத்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் விஜய்
x

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்றிரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சென்னை,

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்றிரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் வந்திருந்த விஜய் ரசிகர்கள் அரங்கில் குவிந்தனர். திரையுலக பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் தனது செல்போன் மூலம் செல்பி முறையில் ரசிகர்களை படம் பிடித்து மகிழ்ந்ததுடன், என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற பெயரில் அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக விழா அரங்கில் நுழைவது தொடர்பாக ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரசிகர்கள் காவல்துறையினரை கீழே தள்ளிவிட்டு உள்ளே நுழையும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.


Next Story