கர்நாடக மாநிலம் மஞ்சுநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால்


கர்நாடக மாநிலம் மஞ்சுநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால்
x

தனது நண்பர்களுடன் மங்களூரு அருகே உள்ள மஞ்சுநாதர் கோவிலுக்குச் சென்று நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார்.

பெங்களூரு,

தமிழ் சினிமாவின் முன்னனி ஹீரோக்களில் ஒருவரான நடிகர் விஷால், அண்மையில் காசி கோவிலுக்குச் சென்று வந்தார். அங்கு சென்ற போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததோடு, காசி நகரை மேம்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

விஷாலின் பதவிற்கு பிரதமர் மோடி பதலளித்து ட்வீட் செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதனை தொடர்ந்து அண்மையில் 11 ஏழைகளுக்கு நடிகர் விஷால் இலவச திருமணம் செய்து வைத்தார். அந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஷால் அடுத்ததாக கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள மஞ்சுநாதர் கோவிலுக்குச் சென்றுள்ளார். தனது நண்பர்களுடன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த அவர், அங்குள்ள யானையிடம் ஆசீர்வாதம் பெறுவது, கோவில் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவளித்தது உள்ளிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


Next Story