விஜய் சேதுபதியுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் நடிகை தீப்ஷிகா வருத்தம்


விஜய் சேதுபதியுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் நடிகை தீப்ஷிகா வருத்தம்
x

மைக்கேல் படத்தில் நடித்துள்ள தீப்ஷிகா அந்த படத்தில் தான் நடித்த பல காட்சிகளை நீக்கி விட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன், கவுதம் மேனன் ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியான மைக்கேல் படத்தில் நடித்துள்ள தீப்ஷிகா அந்த படத்தில் தான் நடித்த பல காட்சிகளை நீக்கி விட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "மைக்கேல் படத்தில் நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை இயக்குனர் விளக்கியதும் பிடித்துப்போய் உடனே நடிக்க சம்மதம் சொன்னேன். எனது கதாபாத்திரத்தை மையப்படுத்தியே மொத்த படமும் நகர்வது போன்று திரைக்கதை அமைத்து இருந்தனர்.கதைகேட்கும் போதே எனது கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பினேன். விஜய்சேதுபதியுடன் நான் நிறைய காட்சிகளில் நடித்தேன். ஆனால் படத்தின் நீளம் காரணமாக நான் நடித்த பல காட்சிகளை நீக்கி விட்டனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.அதையும் மீறி எனது நடிப்புக்கு பாரட்டு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழில் ஒரு படத்தில் நடித்துள்ளேன். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது" என்றார்.


Next Story