பக்லாமுகி கோவிலில் நடிகை கங்கனா ரனாவத் சாமி தரிசனம்


பக்லாமுகி கோவிலில் நடிகை கங்கனா ரனாவத் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 24 March 2024 11:35 AM IST (Updated: 24 March 2024 2:07 PM IST)
t-max-icont-min-icon

நடிகை கங்கனா ரனாவத் இமாசல மாநிலத்தில் உள்ள பக்லாமுகி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

சிம்லா,

பாலிவுட் டாப் நடிகையான கங்கனா ரனாவத், தனது 37வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு சக நடிகர், நடிகைகள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத் இமாசல மாநிலத்தில் உள்ள பக்லாமுகி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

அதனுடன் பகிர்ந்த பதிவில், இந்த ஆண்டு எனது பிறந்தநாளில் மா சக்தியை தரிசனம் செய்தேன். இமாசல மாநிலத்தில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற பக்லாமுகி கோவிலுக்கு சென்ற பின்னர், ஜ்வாலா தேவி சக்தி பீடத்துக்கு குடும்பத்தினருடன் சென்றேன்.

பீடத்தில் சுடர் எரிகிறது, எந்த தண்ணீரும் பொருளும் அந்தச் சுடரை அணைக்க முடியாது, பண்டிதர் பானையில் இருந்து தண்ணீரைச் சுடரின் மீது ஊற்றியபோது, அந்த நீரும் தீப்பிடித்தது, இந்த தெய்வீக வடிவத்தைக் கண்டு பக்தர்கள் வியந்தனர். சிறுவயதில் தவறாமல் ஜ்வாலா தேவியை தரிசித்து வந்தேன், இன்று பல வருடங்களுக்குப் பிறகு அம்மாவை தரிசித்து அனைவரின் வாழ்கையிலும், மகிழ்ச்சியும் செழுமையும் இருக்க வேண்டும் என்று வேண்டினேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story