கவர்ச்சி சூறாவளியாக மாறிய நடிகை கிரண் காசு பார்க்க புதிய செயலி


கவர்ச்சி சூறாவளியாக மாறிய நடிகை கிரண் காசு பார்க்க புதிய செயலி
x

கிரணின் கவர்ச்சி புகைப்படங்களால் அவரது ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர்.

சென்னை

வளர்ந்து வரும் நடிகைகள் மற்றும் ஆன்டி நடிகைகளும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றனர். தாராளமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுவதில் தற்போது இளம் நடிகைகளுக்கும், வயதான ஆன்ட்டிகளுக்கும் இடையே போட்டியே நடைபெற்று வருகிறது.

அதில் 41 வயதை தாண்டிய நடிகை கிரண் சோசியல் மீடியாவையே கிடுகிடுக்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சி சூறாவளியாக மாறி இருக்கிறார்.

2002-ம் ஆண்டில் வெளியான 'ஜெமினி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் கிரண். இந்த படத்தில் அவரது துறுதுறு நடிப்பும், வசீகரிக்கும் அழகும், கொஞ்சல் பேச்சும் பெரிய அளவில் பேசப்பட்டன.

ஏராளமான ரசிகர்களும் அவருக்கு கிடைத்தனர். அதனைத்தொடர்ந்து 'வில்லன்', 'அன்பே சிவம்', 'வின்னர்', 'தென்னவன்', 'ஆம்பள', 'முத்தின கத்திரிக்கா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதுதவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்களில் படுபிசியாக இருக்கிறார் கிரண்.

அடிக்கடி தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டும் வருகிறார். விதவிதமான உடைகள் அணிந்து தன்னை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து, அந்த படங்களை தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் வளைந்து நெளிந்து ஆடும் வீடியோக்களையும் பதிவிடுகிறார். கிரணின் கவர்ச்சி புகைப்படங்களால் அவரது ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர்.

இப்போது இதை வைத்து காசு பார்க்க ஒரு செயலி தொடங்கியுள்ளார். அந்த செயலியில் ஒவ்வொன்றுக்கும் தனி தனியாக விலைப்பட்டியல் போட்டுள்ளார். அதாவது முதலில் அந்த செயலியை பதிவிறக்க வேண்டும் என்றாலே 49 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் கிரணின் இரண்டு கவர்ச்சி படங்கள் அனுப்பப்படும்.

இதைத்தொடர்ந்து கிரணுடன் ஐந்து நிமிடம் பேசுவதற்கு 10000 ரூபாயாம். அதுவே வீடியோ காலில் 15 நிமிடம் பேச வேண்டும் என்றால் 14,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இன்னும் சற்று கிரணுடன் கூடுதலாக வீடியோ காலில் பேச வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு 25 நிமிடங்களுக்கு 25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.


Next Story