'அசுரன்' பட நடிகருக்கு ஜோடியாகும் நடிகை மிருணாளினி

நடிகை மிருணாளினி ரவி சமீபத்தில் வெளியான 'ரோமியோ' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சென்னை,
யூடியூப்பில் ஆல்பம் பாடல்களின் மூலம் பிரபலமானவர் டிஜே அருணாச்சலம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்தில் நடித்திருந்தார். இதில் தனுஷுக்கு மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து 'பத்து தல, புத்தம் புது காலை விடியாதா, தட்றோம் தூக்றோம்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பின் அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'ப்ரீ லவ்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் டிஜே அருணாச்சலத்திற்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'ரோமியோ, எனிமி, கோப்ரா' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.