திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து நடிகை சஞ்சிதா ஷெட்டி சாமி தரிசனம்


திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து நடிகை சஞ்சிதா ஷெட்டி சாமி தரிசனம்
x

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகை சஞ்சிதா ஷெட்டி, 14 கி.மீ. கிரிவலம் மேற்கொண்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டார்.

தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'சூது கவ்வும்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் பீட்சா-2, பாகீரா, விநோதய சித்தம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சஞ்சிதா ஷெட்டி நடித்து வருகிறார்.

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சஞ்சிதா ஷெட்டி, 14 கி.மீ. கிரிவலம் மேற்கொண்டார். அப்போது வழியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து அவர் தேநீர் அருந்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.Next Story