நீண்ட நாள் காதலனுடன் திருமணம்...சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை டாப்சி


நீண்ட நாள் காதலனுடன் திருமணம்...சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை டாப்சி
x

பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை நடிகை டாப்சி 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

நடிகை டாப்சியும், பிரபல பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவும் நீண்ட காலமாகவே காதலித்து வருகிறார்கள். இருவருக்கும் உதய்பூரில் இந்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தனது திருமணம் குறித்து வெளியாகும் சர்ச்சைக்கு டாப்சி விளக்கம் அளித்துள்ளார். அதில், "எனது திருமணம் குறித்து சரியான நேரத்தில் நானே அறிவிப்பேன். ரசிகர்களிடம் சொல்லாமல் எதையும் செய்யமாட்டேன். எல்லாவற்றுக்கும் உரிய கால நேரம் தேவை.

10 ஆண்டுகளாக நானும், மத்தியாசும் காதலித்து வருகிறோம். ஆனால் இப்போதுதான் காதல் வந்தது போல பேசப்படுகிறது. திருமணம் குறித்து தற்போது வெளியாகும் அனைத்து வதந்திகளுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான். நாங்கள் அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. காதலிக்கும் போது இருந்ததை விட, இப்போதுதான் அவர் எனக்கு ஏற்றவராக இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story