'அர்ஜூன் ரெட்டி' படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்- பாலிவுட் நடிகர்


அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்- பாலிவுட் நடிகர்
x

”இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்” என பாலிவுட் நடிகர் ஆதில் ஹூஸைன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

'அர்ஜூன் ரெட்டி', 'அனிமல்' படங்களை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. குறிப்பாக, ரன்வீர், ராஷ்மிகாவை வைத்து இவர் இயக்கிய 'அனிமல்' திரைப்படம் கடுமையான எதிர்வினைகளை சந்தித்தது. ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் இந்தப் படத்திற்கு தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இப்படி இருக்கையில் 'அர்ஜூன் ரெட்டி' படத்தில் கபீர் சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் ஆதில் ஹூஸைன் அதற்காக தான் வெட்கப்படுவதாக வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர், " 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. அதை தவிர்ப்பதற்காகவே அதிக சம்பளம் கேட்டேன். அதையும் ஒப்புக் கொண்டனர். எனக்குக் கொடுத்த ஒரு சில காட்சிகளை மட்டும் நடித்தேன். படத்தை திரையரங்கில் பார்த்தபோது பாதியில் எழுந்து வந்துவிட்டேன். என் வாழ்க்கையில் நான் நடித்ததற்காக வெட்கப்படும் ஒரேபடம் 'அர்ஜூன் ரெட்டி'தான்" எனக் கூறியுள்ளார்.

இதற்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா எக்ஸ் பக்கத்தில் பதில் கூறியுள்ளார். அதில், "நீங்கள் 30 கலைப்படங்களில் நடித்ததை விட 'அர்ஜூன் ரெட்டி' என்ற ஒரு பிளாக்ஸ் பஸ்டர் படம் பெரும் புகழை உங்களுக்குத் தேடித்தந்தது. ஆனால், உங்களை என் படத்தில் நடிக்க வைத்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். உங்கள் கலையைவிட பேராசை பெரிதாக இருக்கிறது. நீங்கள் வெட்கப்பட வேண்டாம். உங்கள் முகத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றி விடுகிறேன். இப்போது மகிழ்ச்சியாக இருங்கள்" என்று கூறியுள்ளார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா.

1 More update

Next Story