மாரடைப்பில் இருந்து மீண்ட நடிகையின் அறிவுரை


மாரடைப்பில் இருந்து மீண்ட நடிகையின் அறிவுரை
x

மாரடைப்பில் இருந்து மீண்ட நடிகை சுஷ்மிதா சென் அதனை பகிர்ந்துள்ளார்.

தமிழில் ரட்சகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சுஷ்மிதா சென் முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 1994-ல் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

சுஷ்மிதா சென்னுக்கு 46 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். சமீபத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஷ்டிக் மற்றும் ஸ்டெண்ட் பொருத்தப்பட்டதாக சுஷ்மிதா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மாரடைப்பில் இருந்து மீண்டது குறித்து சுஷ்மிதா சென் கூறும்போது, "மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்ட அந்த நாட்கள் எனது வாழ்க்கையில் கடினமான கட்டமாக இருந்தது. அந்த கஷ்டத்தில் இருந்து இப்போது கடந்து வந்து விட்டேன்.

அதில் இருந்து மீண்டு வாழ்வின் மறு பக்கத்துக்கு வந்து இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்போது அதை நினைக்கும்போது எனக்கு பயம் ஏற்படவில்லை. வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்து இருப்பதாக நினைத்துக்கொள்கிறேன். இனிமேல் கவனமாக இருப்பேன். எல்லோரும் தங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்'' என்று அறிவுரையும் வழங்கினார்.

1 More update

Next Story