21 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்ட ரஜினி - கமல்..! வைரலாகும் புகைப்படம்


21 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்ட ரஜினி - கமல்..! வைரலாகும் புகைப்படம்
x
தினத்தந்தி 23 Nov 2023 4:09 PM IST (Updated: 23 Nov 2023 4:13 PM IST)
t-max-icont-min-icon

ரஜினி- கமல் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் 'தலைவர் 170' படத்தில் நடித்து வருகிறார். அதேபோல, நடிகர் கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.இந்த இரு திரைப்படங்களையம் லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், 'தலைவர் 170' மற்றும் 'இந்தியன் 2' படங்களின் படப்பிடிப்பு சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற்றது. இதனால் அங்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story