ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
x
தினத்தந்தி 6 Oct 2022 3:52 AM IST (Updated: 6 Oct 2022 3:53 AM IST)
t-max-icont-min-icon

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழில் தற்போதைய முன்னனி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகப் போகும் திரைப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு 'ஃபர்ஹானா' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் படம் இடம்பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதியுள்ளார். இது தவிர செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Meet #Farhana, a woman of strength and confidence and a picture of elegance!! A character crafted to perfection by director Nelson Venkatesan!! Very proud to release this first look!!@selvaraghavan @JithanRamesh @justin_tunes @gokulbenoy @EditorSabu @nelsonvenkat @prabhu_sr pic.twitter.com/15Me7oHxhg

— aishwarya rajesh (@aishu_dil) October 5, 2022 ">Also Read:



Next Story