இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Dec 2025 12:20 PM IST
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்
டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார் நடிகர் சசிகுமார்.
- 19 Dec 2025 12:18 PM IST
கழகத்தின் தொடர் வெற்றிகளை பேராசிரியர் க.அன்பழகனுக்கு அஞ்சலியாக உரித்தாக்குகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 19 Dec 2025 12:17 PM IST
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு நாளை முதல் தடை
சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- 19 Dec 2025 12:16 PM IST
#T20WorldCup டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
- 19 Dec 2025 12:14 PM IST
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- 19 Dec 2025 12:13 PM IST
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க அரசு முன்வர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
- 19 Dec 2025 11:46 AM IST
கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு - அன்புமணி கண்டனம்
தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
- 19 Dec 2025 11:44 AM IST
செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிப்பதுடன், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக, மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- 19 Dec 2025 11:39 AM IST
குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் (19-ம் தேதி ) நிறைவு பெற்றதுடன் மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார். அவை கூடியதும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது.
- 19 Dec 2025 11:35 AM IST
கூட்ட நெரிசலில் நடிகையிடம் அத்துமீறிய விவகாரத்தில் போலீசார் விசாரணை
ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை நிதி அகர்வாலிடம் சிலர் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
















