கோவில் கோவிலாக செல்லும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


கோவில் கோவிலாக செல்லும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
x

ஐஸ்வர்யா கோவில் கோவிலாக சென்று வருகிறார். சமீபத்தில் அவர் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் மனமுருக அம்மனை வேண்டும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுசும், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 18 வருடங்கள் இணைபிரியாமல் வாழ்ந்த இந்த தம்பதியினர், கடந்த ஜனவரி மாதம் பிரியப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

தனுஷ் - ஐஸ்வர்யா இடையே இருப்பது கருத்து வேறுபாடு தான். எனவே இருவரும் மீண்டும் சேர்வார்கள், என்று குடும்பத்தினரும், நண்பர்களும் எதிர்பார்த்தனர். இருவரையும் வாழ்க்கையில் சேர்த்து வைக்க படாத பாடுபட்டனர். ஆனால் எதுவுமே கை கொடுக்கவில்லை. ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல், பேசாமல் அங்கிருந்து பிரிந்து சென்றுவிட்டனர்.

தனுஷ் தற்போது படப்பிடிப்பு பணிகளில் படுபிஸியாக இருக்கிறார். அதேவேளை ஐஸ்வர்யாவும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது அவர் கோவில் கோவிலாக சென்று வருகிறார். சமீபத்தில் அவர் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் மனமுருக அம்மனை வேண்டும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'திருவேற்காடு அம்மன் தரிசனம். நான் அங்கே அமர்ந்து அவளை பார்க்கிறேன். அவள் என்னை பார்த்து புன்முறுவல் பூத்து ஒருபோதும் பயப்படாதே என்கிறாள். அவள் அருகில் எப்போதும் இருக்க வேண்டும் என என் கண்கள் பேசுகின்றன. அவள் என்னுள் தெளிவாக இருக்கிறாள்', என குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்து ரசிகர்களும், 'கவலைப்படாதீர்கள். எல்லாமே நல்லபடியாக நடக்கும்' என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Next Story