அஜித் பட நடிகைக்கு விரைவில் திருமணம்


அஜித் பட நடிகைக்கு விரைவில் திருமணம்
x

தமிழில் அஜித்குமாரின் ஆழ்வார் படத்தில் நடித்த சுவேதாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது.

தமிழில் அஜித்குமாரின் ஆழ்வார், ஜெயம் ரவியின் பூலோகம் படங்களில் நடித்தவர் சுவேதா. வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, மீராவுடன் கிருஷ்ணா, இதயம் திரையரங்கம் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். நிறைய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார். சுவேதாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில், ''என் இதயத்தை நீண்ட நாட்களாக தொலைத்து விட்டேன். இப்போது எனது இதயத்தை கண்டுபிடித்து விட்டேன். கடவுளுக்கு நன்றி" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். சுவேதாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.


Next Story