ஹோலி வாழ்த்துக்களுடன் நடனமாடி ரசிகர்களை கிரங்கடித்த அமலா பால்...!


ஹோலி வாழ்த்துக்களுடன் நடனமாடி ரசிகர்களை கிரங்கடித்த அமலா பால்...!
x

ஹோலி வாழ்த்துக்களுடன் தான் நடனமாடிய வீடியோவை பகிர்ந்து நடிகை அமலா பால் மகிழ்ந்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் அமலாபால். மைனா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த வழியான கடாவர் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது பெரிய விடுமுறை ஒன்று எடுத்துக்கொண்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா பயணம் சென்றுள்ளார். சமீபத்தில் அவர் அருவியில் குளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

நேற்று அவரது தாயின் பிறந்த நாளை முன்னிட்டு சுற்றுலா சென்ற இடத்திலேயே ஒரு மரத்தை நட்டு அதைப் பிறந்தநாள் பரிசாக அவரது தாய்க்குச் சமர்ப்பித்தார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவா இருக்கும் அமலா பால். காக்க காக்க திரைப்படத்திலிருந்து இடம்பெற்றிருக்கும் என்னைக் கொஞ்சம் மாற்றி என்ற பாடலுக்கு கிளாமராக நடனமாடி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் பௌர்ணமி மற்றும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் எனத் தெரிவித்து இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

பதின்மபருவத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என காக்க காக்க படத்தில் இடம்பெற்ற என்னை கொஞ்சம் மாற்றி பாடலுக்கு நடனமாடி அமலா பால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


1 More update

Next Story