ஆடையில்லாமல் நடித்த நடிகர்


ஆடையில்லாமல் நடித்த நடிகர்
x

‘டி 3' என்ற படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக ஓடி இருக்கிறேன் என்று கதாநாயகனாக பிரஜின் தெரிவித்துள்ளார்.

பிரஜின் 'டி 3' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இது சஸ்பென்ஸ் திரில்லர் படமாக தயாராகி உள்ளது. இந்தப் படத்தை பாலாஜி எழுதி டைரக்டு செய்துள்ளார். பீமாஸ் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் ஜே.கே.எம் புரொடக்‌ஷனுடன் இணைந்து மனோஜ் எஸ்.சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு-மணிகண்டன், இசை-ஶ்ரீஜித் எடவானா.

படம் குறித்து இயக்குனர் பாலாஜி கூறும்போது, "இது ஒரே நாளில் நடக்கும் கதை. இந்தப் படத்தின் வரிசையில் அடுத்த பாகங்களையும் உருவாக்க இருக்கிறோம். ஒரு விபத்து, ஒரு கொலை, ஒரு காணவில்லை கேஸ் என்ற மூன்றையும் பின்னணியாக வைத்து, திகில் கதையம்சத்தில் படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை பார்ப்பவர்கள் வெளியே யாரிடமும் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி குடிக்க மாட்டார்கள்" என்றார்.

நடிகர் பிரஜின் கூறும்போது, "நான் முதல் முதலாக போலீஸ் கதையில் நடித்துள்ளேன். இந்தப் படத்திற்கான கதைப்படி ஒரு காட்சியில், நான் நிர்வாணமாக ஓடி இருக்கிறேன். படத்துக்கு நிறைய தடைகள் ஏற்பட்டு, அதைத் தாண்டி தயாராகி உள்ளது. நிறைய நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படம் பேசப்படும்" என்றார்.


Next Story