வாரிசு திரைப்பட படகுழுவிற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்


வாரிசு திரைப்பட படகுழுவிற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்
x

வாரிசு திரைப்படத்தில் முன் அனுமதி பெறாமல் யானைகள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் படகுழுவிற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுபி உள்ளது.

சென்னை

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாரிசு திரைப்படத்தில் முன் அனுமதி பெறாமல் 5 யானைகள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் 7 நாட்களுக்குள் விரிவான விளக்கத்தை சமர்பிக்குமாறு வாரிசு தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Next Story