3 இடியட்ஸ் படத்திற்காக ஆடிஷன் சென்ற அனுஷ்கா சர்மா ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை ஏன்- வீடியோ


3 இடியட்ஸ் படத்திற்காக ஆடிஷன் சென்ற அனுஷ்கா சர்மா ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை ஏன்- வீடியோ
x

பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்தாலும் அனுஷ்காவுக்கு முதன் முதலாக அமீர்கான் படத்தில் வாய்ப்பு கிடைக்காததன் காரணம் தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள்.

மும்பை

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா.பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். அனுஷ்கா சர்மா தனது தொடக்கத்திலிருந்தே உச்சியை அடைய போராடி வருகிறார்.

அனுஷ்கா 2008 ஆம் ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக ராப் நே பனா டி ஜோடி படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் பாலிவுட்டின் மிஸ்டர் பெர்பெக்ஷனிஸ்ட் என அழைக்கப்படும் அமீர் கானுக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா முதன் முதலில் ஆடிஷன் போனார். ஆனால் ஆடிஷன் போனாலும் அங்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அனுஷ்காவை அமீர்கான் திரீ இடியட்ஸ் படத்திற்காக ஆடிஷன் செய்துள்ளார் ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அனுஷ்கா அமீர்கானுக்கு ஜோடியாக பிகே படத்தில் நடித்தார்.

சமீபத்தில் அனுஷ்காவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோ அனுஷ்காவின் ரசிகர் ஒருவர் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில், அறிமுக நடிகை அனுஷ்கா படத்தின் ஆடிஷனுக்கான டயலாக் பேசுவதைக் காணலாம்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பச்சை நிற சட்டை அணிந்து, மேக்கப் இல்லாமல் நடிகை ராஜ்குமார் ஹிரானியின் 3-இடியட்ஸ் படத்திற்காக ஆடிஷன் செய்துள்ளார், ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 3-இடியட்ஸ் 2009 இல் வெளியானது.

இப்படத்தில் அமீர்கானின் கதாநாயகியாக கரீனா கபூர் கான் நடித்திருந்தார். மற்றும் ஷர்மன் ஜோஷி, ஆர். மாதவன், பொமன் இரானி மற்றும் பலர் இருந்தனர். ஆனால் அப்போது ராஜ்குமார் ஹிரானியின் படத்தில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கடும் உழைப்புக்குப் பிறகு, ஐந்து வருடங்கள் கழித்து அதே இயக்குனரின் பிகே படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்தார்.

ஒரு நடிகையாக தன் திறமை முழுவதும் நிரூபித்துள்ளார் அனுஷ்கா. ஜனவரி 11 அன்று, பாலிவுட் மற்றும் கிரிக்கெட்டின் 'விருஷ்கா' ஜோடிகளின் மகளுக்கு மூன்று வயதாகிறது. விருஷ்கா ஜோடியின் குழந்தை வாமிகா.

நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பம் முதல் தாய்மை வரை அனைத்தையும் ரகசியமாக வைத்திருந்தார். நடிகை அனுஷ்கா ஒரு கவர்ச்சியான உருவத்துடன் படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். விருஷ்கா ஜோடி தங்களது குழந்தையை சமூக ஊடகங்களில் இருந்து ஒதுக்கி வைக்க விரும்புவதாக ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளனர்.அதை அனுஷ்கா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.




Next Story