அருண் விஜய் நடிக்கும் 'சினம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


அருண் விஜய் நடிக்கும் சினம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2022 9:58 AM IST (Updated: 24 Aug 2022 10:02 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள 'சினம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் அருண் விஜய் தற்போது ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தல் 'சினம்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய் 'பாரி வெங்கட்' என்ற சப் இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

'சினம்' படத்திற்கு 'சாகா' புகழ் ஷபீர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவாளர் எஸ் கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சினம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'சினம்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அருண் விஜய் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



Next Story